7

எனக்கு ஒரு டேப்லட் வாங்கிக் கொடும்மா………..

மெடிகல் ஷாப் பக்கத்துல இருக்கு!டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் இருக்கு. போய் வாங்கிக்கோ! சொன்னாள் தங்கைஹரிதா.

ஹய்யோ! ஹய்யோ! சின்ன குழந்தையைப்போல தரையைக் கோபத்துடன் உதைத்த 28 வயது ரவியை வினோதமாகப் பார்த்தார் 70 வயது அப்பா சண்முகம்.

இன்னைக்கு பஸ்சுல பாத்தேன். எல்லாரும் காதுல மாட்டிண்டு பாட்டு கேக்கறத….உங்களுக்குப் பிடிக்கல…. நீங்க மாட்டிக்கல…நான் ஏன் வாங்கக்கூடாது.?….

பஸ் டிராவலிங்குக்குத்தான். அதுல சமைக்கமுடியாது….அன்னைக்கு வேகமா வந்து சொன்னியே…….பஸ்சுல கூட்டமா இருக்கறப்ப ஒருபொண்ணு கைல லேசா வளையல் உராய்ஞ்சதுக்கு இல்லாத ஒரு பொண்ணு உங்கிட்ட இருக்கறதுன்னு போட்டுட்டு வந்துட்டியான்னு கேட்டப்ப நீ என்ன சொன்னே! ஞாபகப்படுத்தி பாத்துக்கோ..சொன்ன தங்கையை ஒரு முறை முறைத்தான்.

நான் படிச்ச புஸ்தகத்தை அப்படியே மறுவருஷம் வாங்கிப் படிச்ச பழைய புக் நீ…எனக்கு நீ அட்வைஸ் பண்றியா.?…………அதுதான் உனக்கு எதுவுமே சொல்லித்தரமாட்டேன். எனக்கு வேணுங்கற பேனா,பென்சில் எடுத்துவைக்கற ஜாதி நீ! உனக்கு வாய் வேறயா!

ஆமா…..மாறிப்போன புக்கை மறு வருஷம் வச்சு படி ஜெராக்ஸ் எடுத்துக்கோன்னு சொன்ன கிரிமினல் மைண்ட்னு எனக்குத் தெரியாதா….ஹேண்டிகேப் பர்சன்கூட வண்டில பினாயில்,ஆசிட் விக்கறான்னு சொல்லிட்டு….இப்ப என்னடா கேக்கற……….நான் வச்சிருக்கேன்னா அது எஜூகேஷன் பர்ப்பசுக்காக புரிஞ்சுதா……….!

அப்பாவுக்கு செலவு வைக்கக்கூடாதுன்னுதான் நீ சொல்றதுக்கெல்லாம் தலையாட்டி வாங்கிப் படிச்சேன். உனக்காக இல்ல………இப்ப நான் உன்னைவிட அதிகமா சம்பாதிக்கிறேன்னு பொறாமைல பேசாதடா………..எனக்கூறியபடி குளிக்க துண்டு,சேலை இவற்றுடன் சென்ற மகளைப் பெருமை பொங்க அப்பா பார்த்தார்.

அதுக்காக பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும்,…ஆம்பளைன்னா கொஞ்சம் ஒசத்திதான்….புரிஞ்சுக்கோ……….என் டிகிரி என்ன! படிப்பு என்ன! போயும் போயும் சமைக்கற உங்கிட்ட அட்வைஸ் கேக்கணும்னு எனக்கு தலையெழுத்து………..கத்தினான் ரவி.

சுரீரென என்னவோ கடித்தாற்போல இருந்தது. காலையிலேயே ஆரம்பிச்சாச்சா! அவளுக்கு சமைக்கவும் தெரியும்…சம்பாதிக்கவும் தெரியும்………. ஆனா உனக்கு சுடுதண்ணியாவது வைக்கத் தெரியுமா………………? நெட்டுல படிச்சுக் காட்டுனேனே! ஆப்ரிக்கப்பெண் எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திருக்கான்னு…….இன்னமும் மதரீதியா உன்ன மாதிரி படிச்ச முட்டாள் இருக்கறதாலதான் பெண் இன்னமும் என்னைமாதிரி உங்கிட்ட லோல்படவேண்டியிருக்கு! என டங்கென்று தரையில் பாத்திரத்தை வைத்தாள். அம்மாவின் வெந்நீர் பாத்திரம் சிதறி வெந்நீர் கையில் விழுந்தது. அம்மா வேண்டுமென்றே கொட்டும் ஆளில்லை. அதனால் பர்னால் தடவ டிராயரைத் திறந்தான். கடவுள் கெட்ட செயல் செய்யும்போது உடனே தண்டிப்பார் என்பார்களே! அதுபோலவா இதுவும்……என யோசித்துக்கொண்டிருக்கும்போது ஹரிதாவின் பேங்க்பாஸ்புக்கும்,கூடவே அவள் பையில் வைத்திருக்கும் பர்சும் கீழே விழுந்தது.

உடல்உறுப்புதானம் செய்வதற்கான அடையாள அட்டையுடன் அவன் பெயரிட்ட பேங்க் பாஸ்புத்தகத்தை வேகமாகப் புரட்டிப் பார்த்தான். இருந்த தொகையைப் பார்த்தவுடன் அவனுக்கு மயக்கமே வந்தது. தனது ஒரு மாத உழைப்பில் அரை பங்கு முழுவதும் அதில் மாதாமாதம் இருப்பதைக்கண்டு மிரண்டான்.

மிகவும் மெல்லியகுரலில் அப்பா………… என்றான்.

என்னப்பா! எல்லாத்தையும் பாத்தாச்சா!……….

பாத்துட்டேன். எதுக்கு அவ எம்பேர்ல பணத்தை போட்டுவைக்கிறா……

உனக்கு படிக்க விருப்பமில்லன்னுதான்.. டிகிரி சேர சேரத்தான் இன்னைக்கு சேலரி மார்க்கெட் கூடுது, ப்ளஸ் எக்ஸ்பீரியன்சும் வேணும். ஆனா நீ சம்பாதிக்க ஆரம்பிச்சதும் காலைல எழுந்துக்கறதும் லேட், படிக்கற காலத்துலயும் அப்படித்தான். ஆனா அவ நேரத்துல படு ஷார்ப். கிடைச்சா ஒரு மணிநேரத்துல என்ன டிஷ் கத்தக்கலாம்னும், என்ன படிக்கலாம்னு திங்க் செய்ற ரகம். அவ சின்னவயசுலருந்தே அப்படித்தான். சினிமாவ வேணும்னாலும் கேட்டுப்பார். ரோஜாபடக் குழிப்பணியாரம் முதல் விஐபி படம்வரை சொல்வா.. தப்பு யார் செஞ்சாலும் கேப்பா! கால்மேல காலுபோட்டு படுத்தாகூட அவளைத் திட்டுவேன்! டிரெஸ் ஒழுங்கா போடலன்னா திட்டுவேன். பாத்தியா…பாத்ரூம்போகும்போது அத்தனை துணியை அள்ளிட்டு போறதை….காரணம் என்ன தெரியுமா? அவ வெளில வேலைக்கு நாலு இடத்துக்குப்போறா…எங்க எப்பிடி இருக்குமோ?அதனால தான் இந்த கட்டுப்பாடு. ஆனா இதேபாரு…உன் அண்ணன் புள்ளையை என்னால சொல்ல முடியாது.ஏன் தெரியுமா? அது தகப்பன் அவன். அவந்தான் சொல்லணும். எம்புள்ளையை நாலுபேர் தப்பா பேசக்கூடாதுன்னுதான் வளத்தேன். அதுக்காக பொக்கிஷத்தை வீட்ல பூட்டமுடியாதப்பா! எதுக்குத் தெரியுமா! அவ சமுதாயத்துல மேல போறதுக்கு….. பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும்னு முத்திரை. அதை அவ்வளவு சுலபத்துல எடுக்க முடியாது. அதனால தான் அப்பிடின்னு சொல்லுவேன்..அதை சிரிச்சுக்கிட்டே சமாளிச்சுடுவா..ஆனா மாத்திக்கலை…..ஏன்னு ஒரு நாள் அவ ஃப்ரெண்ட்கிட்ட பேசுனப்பதான் கண்டுபிடிச்சேன். அன்னைக்கு உனக்கு ஒரு பொண்ணுபாத்து முடிஞ்ச ஸ்டேஜ்ல வேண்டாம்னு சொன்னியே…ஞாபகம் இருக்கா…அன்னைக்கு கீழே விழுந்திருக்கா…அன்னைக்கு நீ தந்த வலி எல்லாத்துக்கும் மனசுலதான். ஆனா அவ உடம்புலபட்டதுனாலதான் அவ இன்னைக்குவரைக்கும் கால்மேலே கால் போட்டுட்டு இருக்கா… வலி தெரியக்கூடாதுன்னு…லைட்டான்னு சொன்னதுனால ஓட்றா…..தெரிஞ்சமாதிரி காட்டிக்காதே..சரியா…………நீ செஞ்ச தப்பு பின்னாடி உன்னை பாதிக்கக்கூடாதுன்னு கோவிலுக்குப்போய் பணத்தைப் போட்டிருக்கா. ஆனாலும் இன்னமும் பயப்படுறா…..நீ செஞ்சதுக்கு………….இப்ப வெளிலமாதிரி பாத்ரூம்லய பக்கத்துல டிரெஸ்சிங் செஞ்சு தர்ற வசதியெல்லாம் அப்பாட்ட இல்லப்பா……அது அவளுக்குத் தெரியும். இருக்கற இடத்துக்குத் தகுந்தமாதிரி மாறிப்பா..அதுதான் அவகிட்ட ரொம்ப பிடிச்சது……ஆனா நான் அப்படியே சிக்கனமா வேலை செஞ்சுக்கிட்டே இருக்கேன்னுதாம்பா ஒரே வருத்தம். அதுதான் ரிடையராயிட்டேன். சந்தோஷமா அம்மா கொடுக்கற வீட்டுவேல செஞ்சுட்டு சாப்பிடுறேன். ரேஷன் அரிசிலதாம்பா டிஃபன். நீ வேண்டாம்னுட்டு போய்டுவே. அவ அம்மா கொடுத்தான்னா எதைக்கொடுத்தாலும் சாப்பிடுவாப்பா………..நீ பிறந்ததுக்குப் பிறகுதாம்பா இந்த வீடு எல்லாம்….சிக்கனமா இரப்பா.. அதைத்தான் அவ சொல்றா….. அதுக்காக இந்த வசதியெல்லாம் வேண்டாம்னு சொல்லலை. இந்தவசதி விலை கம்மின்னா அதை வாங்கிக்கோ..கண்ணுக்கு,காதுக்கு எது தேவையோ அதை மட்டும் வச்சுக்கோ சரியா…! அம்மா வீட்டுக்கு வெள்ளையடிக்க ஆள்பாக்கணும்னு சொன்னா….ஆளே வரமாட்டேங்கறா..அதான் சாமான் வாங்கிட்டுவந்தா நானே அடிச்சுடுவேன். எதுக்குப்பா சுண்ணாம்பு.?.உங்களுக்கும் சேத்துத்தான் டேப்லட் கேட்டேன்…….இழுத்தான் ரவி. பெயிண்ட் அடிக்கலாம்ல…..

நீ வேற என்கிட்ட இருக்கற பணத்துக்கு தகுந்தமாதிரித்தான் வாழணும்..நீ சம்பாதிக்கற காசுல சேத்து வைக்கமாட்டேன்னுதான் ஏடிஎம்கார்டுகூட என்கிட்ட இருக்கு……..புரிஞ்சுதா……அவளைத் திட்டாதே.. ஒரு அலையன்ஸ் வந்திருக்கு.. ஏற்கனவே 10 வருஷத்துக்கு முன்னாடியே வந்தப்பல்லாம் பண்ணிக்கமாட்டேன்னுட்டா.. தன் கால்ல நின்னப்புறம்தான்னு. அப்படியே என்னைமாதிரி…..அவ என் பக்கத்துலயே இருக்கறமாதிரி ஒரு ஃப்ளாட் வாங்கியிருக்கா தெரியுமா! நேத்துதான் ரிஜிஸ்டர் செஞ்சேன். அவ டேஸ்டுக்குத் தகுந்தமாதிரி கூடத்துல ஊஞ்சல்……கொஞ்சம் வெளில இடம். செடி போடத்தான். ஒரு கார் வாங்க இடம். அவ்வளவுதாம்பா..வர்றியா….! பாக்க போலாமா……உங்காசுல இன்னமும் சேரலன்னுதான் உனக்கு பணம் சேக்கறா… துணில காசைக் கொட்டமாட்டான்னு உனக்குத் தெரியாதா? எந்த இடத்துக்கு எது தேவையோ அதை வாங்கிப்பா…………

என்னப்பா இவ்வளவு சந்தோஷமா சொல்ல வேண்டியதை மெதுவா சொல்றீங்க…?

அவளுக்கு அது பிடிக்காதுப்பா…அதான் சொல்லலை. பப்ளிசிட்டி பிடிக்காது அவளுக்கு…வேலை பாக்கற இடத்துலயும் நல்ல பேர். அதான் அவங்க சொல்லிக்கொடுத்து இவ்வளவு முன்னுக்கு வந்துருக்கா……

உனக்கும் சேத்துதாண்டா பொண்ணுபாத்து வச்சுருக்கு…..பழையபடி அங்கலாவண்யம் பேசாதே……அழகு கூட வராது….பேசியபடி தலையில் முண்டாசு கட்டியபடி வந்த தங்கையை உற்றுப்பார்த்தான். நதியில் விளையாடி……………. என அம்மா பாசமலர் பாடல் பாடிக்காட்ட அப்பா சிரித்தார்.தலைக்குச் சாம்பிராணி போட்டு தலையைத் தட்டிவிடட்டுமா என வாய் வரை வந்த கேள்வியை அப்பா மென்றுவிழுங்கினார். ஓ!……இவள் நாளை வேறு வீட்டிற்குச் செல்லவேண்டிய குத்துவிளக்கு…….சுவரில் வாத்துடன் பெண்ணைச் சேர்த்து அவள் வரைந்த படத்தினைப் பார்த்தபடி நின்றார். வெளியில் பாரிஜாதமரம் அருகில் உள்ள செம்பருத்திச் செடிக்குத் தனது பூக்களை வாரிக்கொட்டிக்கொண்டிருந்தது.

 

License

Share This Book